சமந்தாவின் அடுத்த படத்திற்கு தளபதி விஜய் பட தலைப்பு
Prabha Praneetha
3 years ago

தற்போது விஜய்தான் கோலிவுட்டில் வியாபாரத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். அவரது படங்கள் நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படாத அளவுக்கு வசூல் வருகிறது என்கிற பேச்சு இருந்து வருகிறது.
இந்நிலையில் விஜய்யின் ஹிட் படங்களில் ஒன்றான குஷி என்ற பெயரை தற்போது விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்த படத்தின் பெயருக்கு சூட்டி இருக்கிறார்கள் என தகவல் கசிந்து இருக்கிறது
குஷி தமிழில் ஹிட் ஆன பின் தெலுங்கிலும் ரிமேக் செய்யப்பட்டது. அதே தலைப்பை தான் தற்போது இந்த படத்திற்கு வைக்க படக்குழு முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் அது உறுதியாகும்.
வரும் மே 9ம் திகதி தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அறிவிப்பு வரும் என அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.



