AK 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாகும் மஞ்சு வாரியர்
#Cinema
#Actor
#Actress
Prasu
3 years ago

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், அவர் நடிப்பில் கடந்த வலிமை திரைப்படம் வெளியாகியிருந்தது.
அப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித்.
இப்படத்தை தொடங்கும் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது, ஏன்னென்றால் அப்பத்தில் கெட்டப், வினோத்தின் கதை என அனைத்து பெரிய விஷயங்களாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தற்போது இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தான் இணையத்தில் பரவி வருகிறது. ஆம் இப்படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கும் வலிமை திரைப்படத்தில் நடிகை ஹுமா குரேஷி அஜித்தின் தோழியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



