உயிருக்கு பயந்து தலைமறைவான அசுரன் பட நடிகை..
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமாக இருப்பவர் நடிகை மஞ்சு வாரியர். பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கும் நடிகர் திலீப்பின் முதல் மனைவியான இவர் தற்போது அவரை விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர் அசுரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானார். தேசிய விருது பெற்ற அந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்து இருந்தார். அதன் பிறகு அவர் மீண்டும் மலையாளத் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் பிரபல மலையாள இயக்குனர் சனல்குமார் மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, மஞ்சு வாரியார் சில கந்து வட்டிக்காரர்களின் பிடியில் இருப்பதாகவும், அதனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் அவருடைய மேனேஜர் முதற்கொண்டு யாரையும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் மஞ்சு வாரியர் குறித்து மலையாள திரையுலகின் பாலின சமத்துவத்திற்காக செயல்படும் அமைப்பிற்கு நான் மெயில் அனுப்பி இருக்கிறேன்.
ஆனால் அங்கும் எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. மற்ற விஷயங்களைப் போல் இது நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளும் விஷயம் அல்ல.
இந்த விஷயத்தை கேரள ஊடகங்கள் கண்டும் காணாமல் இருப்பது எனக்கு சந்தேகத்தை அளிக்கிறது.
மேலும் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அவரது முன்னாள் கணவரும் சந்தோசத்தில் இருப்பதாக தெரிகிறது.
இந்தப் பிரச்சினையை தேசிய ஊடகங்கள் சீரியசாக எடுத்துக்கொண்டு சரி செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் இப்படிக் கூறி இருக்கும் போது மஞ்சு வாரியர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும் உயிருக்கு பயந்து தலைமறைவாக இருக்கிறாரா என்றும் சிலர் சந்தேகம் எழுப்பி இருக்கின்றனர்.



