பிரான்ஸில் பரவும் புதிய வகை நோய் - பொது மக்களுக்கு எச்சரிக்கை

#France #Disease
Prasu
3 years ago
பிரான்ஸில் பரவும் புதிய வகை நோய் - பொது மக்களுக்கு எச்சரிக்கை

பிரான்ஸ் உட்பட சில நாடுகளில் பத்து வயதுக்கு உட்பட்ட டசின் கணக்கான சிறுவர்கள் மத்தியில் புதுவகையான கல்லீரல் வீக்க நோய் அவதானிக்கப்பட்டிருக்கிறது. 

அது வேறும் பல நாடுகளில் காணப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் ஓர் அறிக்கையில் எச்சரித்துள்ளது.

முதலில் பிரித்தானியாவிலும் பின்னர் ஸ்பெயின், நெதர்லாந்து, டென்மார்க், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பல டசின் சிறுவர்களில் இந்த நோய் ஏற்பட்டுள்ளது.

எதிர்பாராத இந்தப் புதிய வைரஸ் நோயின் நோயியல் தன்மையை அறிந்து கொள்ள ஆய்வுகள் நடத்தப்பட்டுவருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஹெபடைடிஸ் எனப்படுகின்ற கல்லீரல் நோய் பொதுவாக வளர்ந்தவர்களில் தோன்றுவது வழக்கம். ஏ முதல் ஈவரை (A to E)பெயரிடப்படுகின்ற ஹெபடைடிஸ் வைரஸ் பல்வேறு காரணங்களால் ஒருவருக்குத் தொற்றுகிறது.அதன் பாதிப்புகள் வேறுபடுகின்றன. 

ஆனால் குழந்தைகளில் கண்டறியப்பட்டுள்ள புதிய ஹெபடைடிஸ் வைரஸ் இந்த ஏ முதல் ஈ வரையான வைரஸ் கிரிமிகளுக் குள் அடங்காத புதிய வகை என்ற தகவல்

மருத்துவ வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரான்ஸின் லியோன் போதனா மருத்துவ மனையில் நோய்த் தன்மை அறியாத கல்லீரல் வீக்கத்தினால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் மீது பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகப் பொதுச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

வழக்கமாக வளர்ந்தோரில் ஏற்படுகின்ற ஹெபடைடிஸ் நோயின் பொதுவான அறிகுறிகளாகிய உடல் மஞ்சள் நிறமாக மாறுதல், வயிற்றில் அரிப்பு, கடும் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், உடல் வெப்பம் அதிகரித்தல், வழமைக்கு மாறான களைப்பு, பசியின்மை, வயிற்றுவலி போன்ற அதே அறிகுறிகளே சிறுவர்களிடையேயும் அவதானிக்கப்பட்டுள்ளன. 

ஹெபடைடிஸ் ஏற்பட்ட சிறுவர்களில் எவரும் உயிரிழக்கவில்லை. ஆரோக்கியமாக இருந்த சிலர் ஆபத்தான கட்டத்தை எட்டி யுள்ளனர். அவர்களில் ஆறு சிறுவர்களுக்கு ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று மருத்துவ அறிக்கைகள் வெளியாகி உள்ளன.

ஐக்கிய ராஜ்ஜியத்தின் சுகாதாரப் பாதுகாப்பு முகவரகத்தைச் சேர்ந்த (UKHSA) நிபுணர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், கைகளை நன்கு கழுவுதல் போன்ற சாதாரண சுகாதாரப் பழக்க வழக்கங்களைப் பேணுவதே நோயின் மூலம் என்ன என்பது தெரியாத இந்த வைரஸ் நோய்த் தொற்றுக்கான பாதுகாப்பு வழி முறை ஆகும் என்று தெரிவித்துள்ளார். 

குழந்தைகளில் நோயின் அறிகுறி கண்டால் உடனேயே சிகிச்சை நிலையங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!