ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலகத்தை முற்றுகையிட்ட இளைஞர், யுவதிகள்
Nila
3 years ago

ஜனாதிபதி செயலகத்தை நேற்றிரவு முதல் முற்றுகையிட்டு இளைஞர், யுவதிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
பெரும் எண்ணிக்கையிலான மோட்டார் சைக்கிள்கள், கார்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் வேன்களில் வருகைத் தந்த பெரும் எண்ணிக்கையிலான இளைஞர், யுவதிகள் ஜனாதிபதி செயலக வளாகத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ உள்ளிட்ட ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
ஜனாதிபதி வளாகத்தை சூழ பாதுகாப்பு கடமைகளுக்கான பெரும் எண்ணிக்கையிலான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
எனினும், ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர், யுவதிகள் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.



