பிரித்தானியாவில் சோகம் 17 மாத குழந்தையை கடித்து குதறிய நாய்
Nila
3 years ago

பிரித்தானியாவின் செயின்ட் ஹெலென்ஸ் என்ற இடத்தில் சுமார் 15:50 மணியளவில் நேற்று திங்கள் நடைபெற்ற இந்த சோக நிகழ்வில் பெல்லா-ரே பேச் (Bella-Rae Birch) என்ற 17 மாத சிறுமியை அவர்கள் 7 நாட்களுக்கு முன்னர் வாங்கிய நாய் கடித்ததில் காயமடைந்த குழந்தையின் உயிர் மருத்துவமனையில் பிரிந்துள்ளது.
குழந்தையின் குடும்பம் வெளியிட்ட தகவலில், குழந்தையின் பிரிவால் விடுகிறோம் ஆனால் ஒருபோதும் மறக்க முடியாது என்றும், தமக்கு துணையாக இருந்த உள்ளூர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள்.
பிரித்தானிய போலீஸ் வெளியிட்ட தகவலின் படி, குழந்தையை தாக்கிய நாய் சட்டத்துக்கு விரோதமான முறையில் வழக்கப்பட்ட நாய் இனமா என்றும், இதற்கு முன்னர் இந்த நாயை வைத்திருந்தவரையும் விசாரணை செய்யப்படும் என்று தெரிவித்தனர்



