23-வது நாள் போர் ;உக்ரைன் ரஷியா போரில் இதுவரை 14,200 ரஷிய வீரர்கள் பலி

#world_news #Russia #Ukraine
23-வது நாள் போர் ;உக்ரைன் ரஷியா போரில் இதுவரை 14,200 ரஷிய வீரர்கள் பலி

 

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, அந்நாடு மீது கடந்த மாதம் 20 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 24 வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை சுற்றி வளைத்துள்ள ரஷியா, தலைநகர் கீவ் நகரையும் கைப்பற்ற போராடி வருகிறது. கீவ் நகரில் 60 பொதுமக்கள் உள்பட  222 -பேர் உயிரிழப்பு

உக்ரைன் படைகள் வலுவாக எதிர்ப்பதால்,  இரு தரப்பினருக்கும் கடுமையாக மோதி வருகின்றனர். போர் தொடங்கியதில் இருந்து கீவ் நகரில் 60 பொதுமக்கள் உள்பட 222- பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 241 பொதுமக்கள் உள்பட 889- பேர் ரஷிய தாக்குதலில் காயம் அடைந்து இருப்பதாகவும் கீவ் நகர நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கியதில்  இருந்து சுமார் 14,200 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் ஆயுதப்படைகள் கூறுகின்றன.மேலும்  93 ரஷிய விமானங்கள் மற்றும் 112 ஹெலிகாப்டர்களுடன் 450 ரஷிய டாங்கிகள் மற்றும் கிட்டத்தட்ட 1,450 மற்ற கவச போர் வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

 72 ஏவுகணை ராக்கெட் அமைப்புகள் மற்றும் 43 விமான எதிர்ப்பு ஆயுத அமைப்புகளுடன் 205 ரஷிய பீரங்கி அமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனை உறுதி செய்யமுடியவில்லை.

அமெரிக்க மற்றும் நேட்டோ அதிகாரிகளின் தகவல்களின்படி, ரஷியாவின் உயிரிழப்புகள் 3,000 முதல் 10,000 வரை இருக்கும் என்று அமெரிக்க மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!