வேதனம் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை போராட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்!
#government
Reha
3 years ago

வேதனம் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய, இன்று தமது கோரிக்கைகளை முன்வைத்து 17 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அதன் பொதுச்செயலாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.
வேதனம், பதவி உயர்வு, பயணக்கட்டணம் அதிகரிப்பு, அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவை யாப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



