மிக மோசமான நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் சரணடையும் இலங்கை!

#SriLanka
Nila
3 years ago
மிக மோசமான நிலையில்  சர்வதேச நாணய நிதியத்திடம் சரணடையும் இலங்கை!

இலங்கை அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்களை ஆரம்பிக்கும் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு மற்றும் அந்நியச் செலாவணியை சீரமைக்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 
இதன்படி, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவின் வொஷிங்டன் நகருக்குச் செல்லவுள்ளார். அங்கு அவர் இலங்கை தொடர்பான அறிக்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கவுள்ளார்.
 
அந்நியச் செலாவணி கையிருப்பு 2.31 பில்லியன் டொலருக்கும் குறைவாக உள்ள நிலையில், இலங்கை பல வருடங்களில்  மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது.
 
2.31 பில்லியனுக்கும் குறைவான அந்நியச் செலாவணி இருப்பு, எரிபொருள், உணவு மற்றும் மருந்து இறக்குமதிக்கான கொடுப்பனவுகள் மீதான நெருக்கடி என நாடு நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. 
 
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்துடனான எதிர்கால பேச்சுக்கள் இலங்கையின் கடனை மறுசீரமைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!