உக்ரைன் ரஷ்யாவின் ஐந்து விமாங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது: தாக்குதலை அதிகப்படுத்துமா ரஷ்யா?
Mayoorikka
3 years ago

உக்ரைன் மீது ரஷிய ராணுவம் போர்த்தொடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள உக்ரைன் ஐந்து விமாங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. ரஷியா தாக்குதலில் இருந்து உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுத்து வருகிறது.
அந்த வகையில் ரஷியாவின் ஐந்து போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் ரஷியா தாக்குதலை அதிகப்படுத்தும் என அஞ்சப்படுகிறது.



