ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் உயர்மட்டக் குழுவுடன் பேசவுள்ள பீரிஸ்: நோக்கம் என்ன?

Mayoorikka
3 years ago
ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் உயர்மட்டக் குழுவுடன் பேசவுள்ள பீரிஸ்: நோக்கம் என்ன?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கைத் தூதுக் குழுவிற்கு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமை தாங்கவுள்ளார்.

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வு 2022       பெப்ரவரி 28 முதல் ஏப்ரல் 01  வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. 

 இந்த அமர்வின் போது, புதுப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணத்தை ஐ.நா  மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் சபையில் முன்வைக்கவுள்ள அதே வேளையில், 2022 மார்ச் 03ஆந் திகதி இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடல் அமர்வொன்றும்   இடம்பெறவுள்ளது.

 ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடருக்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவை  ஜி.எல். பீரிஸ் வழிநடாத்தவுள்ளார். 

 இந்த விஜயத்தின் போது, பேரவையின் 49ஆவது அமர்வின் உயர்மட்டப்   பிரிவில் உரையாற்றவுள்ள வெளிவிவகார அமைச்சர்,  அதன் பின்னர் இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடலில் உரையாற்றவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் முக்கியஸ்தர்களுடன்   வெளிவிவகார அமைச்சர்   சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!