கனடாவில் கோரவிபத்து - தமிழர் ஒருவர் கவலைக்கிடம்
Nila
3 years ago

கனடா - மார்கம் நகரில் நேற்றையதின வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் 56 வயதான தமிழர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் விபத்தில் சிக்கிய தமிழர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
16வது அவென்யூ மற்றும் மிங்கே அவென்யூ சந்திப்பில் வைத்து சாம்பல் நிற கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தகவல்களை வழங்குமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் அறிந்தவர்கள் 1-866-876-5423 அல்லது 7704 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்க முடியும் என பொலிஸார் கூறியுள்ளனர்.



