குறைந்த வருமானம் கொண்ட 40 குடும்பங்களுக்கு விசேட இலத்திரனியல் அட்டை
Reha
3 years ago

அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினத்தை கருத்திற்கொண்டு சகல கிராம சேவையாளர் பிரிவுகளிலும், வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட 40 குடும்பங்களுக்கு, 2,000 ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்வதற்கான இலத்திரனியல் அட்டையொன்றை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெண் தொழில் முனைவோரினால் நடத்தி செல்லப்படும் சிறிய சிறப்பு அங்காடிகளில், குறித்த இலத்திரனியல் அட்டையின் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பெண் தொழில் முனைவோரினது சிறப்பு அங்காடி வலையமைப்பொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



