ISIS இயக்கத்தின் தலைவர் அமெரிக்க சிறப்பு படைப்பிரிவினரால் கொலை - ஜோ பைடன் அறிவிப்பு
Prasu
3 years ago

ISIS இயக்கத்தின் தலைவரான அபூ இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி அமெரிக்க சிறப்பு படைப்பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனை தெரிவித்துள்ளார்.
வட மேற்கு சிரியாவில் இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்..
2019 ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் முன்னாள் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியை கொன்ற நடவடிக்கைக்குப் பிறகு அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அமெரிக்கத் தாக்குதல் இதுவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



