எரிபொருள் விலை மேலும் எகிறுமா? - இல்லை என்கிறார் பஸில்

எரிபொருள் விலையை மேலும் அதிகரிப்பதற்கான எண்ணம் தற்போது இல்லை என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி கோரி அடுத்த வாரம் அமைச்சரவை யோசனை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது எனவும், விலை அதிகரிக்க உத்தேசம் உள்ளதா எனவும் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளிக்கும்போதே நிதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால் அது குறித்து மகிழ்ச்சி அடைய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்றோ அதிகரிக்கப்படாது என்றோ நிதி அமைச்சர் உறுதியாக எதனையும் தெரிவிக்கவில்லை.
அதேவேளை, மத்திய வங்கியால் தொடர்ச்சியாகப் பணம் அச்சிடப்படுவது தொடர்பிலும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.
பணம் அச்சிடுவது தற்போதைக்கு நிறுத்தப்படாதுத எனவும், தனது கையெழுத்திட்ட பணம் வெளிவரும் வரை அது தொடரட்டும் எனவும் நகைச்சுவையாக அமைச்சர் பஸில் பதில் வழங்கினார்.



