அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் அபாயம்.

#SriLanka #School
Nila
3 years ago
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் அபாயம்.

அரச பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்கள் மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு இம்மாதம் 07ம் திகதி முதல் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அனைத்து பாடசாலைகளுக்குமான கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும் மார்ச் மாதம் 07ம் திகதி ஆரம்பிக்கப்படும் என அமைச்சு மேலும் கூறியுள்ளது.

கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையிலேயே, இந்த விடுமுறை வழங்கப்படுகின்றது.

இதேவேளை, ஆரம்ப வகுப்புக்களை தவிர ஏனைய அனைத்து வகுப்புக்களுக்கும் விடுமுறை வழங்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், கல்வி அமைச்சின் இந்த தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

இதன்படி, தற்போது அனைத்து வகுப்புக்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!