சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலை குறைப்பு
Keerthi
3 years ago

சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை இரண்டு ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, சதொசவினால் 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி ஒரு கிலோ இன்று (29) முதல் 128 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று காலை புறக்கோட்டை அரிசி மொத்த சந்தைக்கு விஜயம் செய்த சந்தர்ப்பத்தில் இதனை தெரிவித்துள்ளார்.



