கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் மகான் படத்தின் கதாப்பாத்திர போஸ்டர்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் 'மகான்'. விக்ரமும் அவருடைய மகனும் இணைந்து நடித்திருப்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது. மகான் திரைப்படம் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அந்த படத்தின் கதாப்பாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நடிகை சிம்ரன் நாச்சி என்ற கதாப்பாத்திரத்திலும், நடிகர் முத்துக்குமார் ஞானம் என்ற கதாப்பாத்திரத்திலும், நடிகர் சனன்ந்த் ராக்கி என்ற கதாப்பாத்திரத்திலும் தோன்றுகின்றனர். இந்த அறிவிப்பை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.
Here's presenting @SimranbaggaOffc as NAACHI@ActorMuthukumar as GNANAM#Sananth as ROCKY #MahaanOnPrime from FEB 10 th #ChiyaanVikram #DhruvVikram @7screenstudio @PrimeVideoIN #Mahaan pic.twitter.com/d1UrQpPZ4L
— karthik subbaraj (@karthiksubbaraj) January 29, 2022



