கொழும்பில் பலத்த பாதுகாப்புடன் விசேட போக்குவரத்துத் திட்டம்!

#SriLanka
Nila
3 years ago
கொழும்பில் பலத்த பாதுகாப்புடன் விசேட போக்குவரத்துத் திட்டம்!

சுதந்திர தினக் கொண்டாட்டம் இடம்பெறும் நாளன்று, கொழும்பு நகரிலும், சுதந்திர சதுக்க வளாகத்திலும், விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறையாகும் என பொலிஸ் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இடம்பெறவுள்ள, சுதந்திர தினக் கொண்டாட்டதுக்கான ஒத்திகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, இன்று(29) முதல் எதிர்வரும் 3ஆம் திகதிவரை, சுதந்திர சதுக்க வளாக வீதிகளில், விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இன்று காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரையில், இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

எனவே, கொழும்புக்கு பிரவேசிப்பதற்கும், கொழும்பிலிருந்து வெளியேறுவதற்கும் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு, சாரதிகளிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!