தென்னிலங்கையில் அதிசயம்

Mayoorikka
3 years ago
தென்னிலங்கையில் அதிசயம்

தென்னிலங்கையில் வெள்ளை நிறத்தினாலான அரியவகை அணில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் வஸ்கடுவ - சமுத்திரராமய விகாரைக்கு அருகில் வசிக்கும் தாரக தயான் என்பவரின் வீட்டிற்கே குறித்த அரியவகை அணில் நேற்று வந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெள்ளை நிற உடலையும், சிவந்த கண்களையும் கொண்ட இந்த அணில் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளதுடன், பிரதேசவாசிகளால் தேசிய மிருகக்காட்சிசாலைக்கும் களுத்துறை வடக்கு பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.

மேலும், இந்த அணிலை அதிசயம் என்று கூறுவதுடன், பெருமளவானோர் வருகைத்தந்து பார்வையிடுகின்றனர்.

சுமார் ஒரு அடி நீளமுள்ள இந்த அணில் தேசிய மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!