ஓடிடி தளத்தில் வெளியாகும் திரிஷா படம்
Prabha Praneetha
3 years ago

தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷாவின் ஒரு படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் நடிப்பில் ஹேய் ஜுட் என்ற மலையாள திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் நாயகனாக நிவின் பாலி நடித்து இருந்தார்.
இந்த படம் மலையாளத்தில் நல்ல வெற்றி பெற்ற நிலையில் தற்போது தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆஹா என்ற ஓடிடியில் ஜனவரி 21-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



