சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி - நாக சைதன்யா
Keerthi
3 years ago

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா விவாகரத்து அறிவிப்பு வெளியாகி நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும், இவர்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் பேட்டியளித்த நாகசைதன்யா விவாகரத்து என்பது இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு என்றும் விவாகரத்துக்கு பின் சமந்தா சந்தோசமாக இருந்தால் தனக்கும் சந்தோசம்தான் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘திரையில் தனக்கு சரியான ஜோடி சமந்தா தான் என்றும் அவருக்கும் எனக்குமான கெமிஸ்ட்ரி சரியாக ஒத்துப்போகும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் சமந்தா நடித்த ’மஜ்லி’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சினிமா செய்திகளை படிக்க இங்கே அழுத்தவும்



