கொண்டைக்கடலை சுண்டல் சாப்பிடுவதால் ஏற்படும் நற்பயன்கள்.
                                                        #Health
                                                        #Food
                                                        #Grams
                                                    
                                            
                                    Mugunthan Mugunthan
                                    
                            
                                        3 years ago
                                    
                                மாலை நேரத்தில் ஒரு விருப்பமான ஸ்நாக்ஸ் என்றால் அது கொண்டைக் கடலை சுண்டலாகத்தான் இருக்கும். ஏனெனில் கொண்டைக் கடலையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதை நீங்கள் எப்படி சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். இதில் உள்ள மருத்துவப் பயன்களை பற்றி பார்க்கலாம்.
- *கொண்டைக்கடலையில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி, மெக்னீசியம், இரும்பு, செலினியம், கனிம சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் குறைவான கொழுப்பு உள்ளது. கொண்டைக்கடலை நம் உடலுக்கு மிக முக்கியமானது ஆகும்.
 - *கொண்டைக்கடலையை தண்ணீரில் ஊற வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். மெலிந்த உடல் பெருக்கும். நுரையீரல் நோய்களும் குணமாகும்.
 - *கொண்டைக்கடலையை வறுத்து பொடி செய்து தினமும் இருவேளை உட்கொண்டால் வயிறு பொறுமல், சிறுநீர் சரிவர வெளிப்படாமல் சொட்டு சொட்டாக போதல், சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.
 - *லேசாக வறுத்து சாப்பிட்டு பின் பால் அருந்தி வர இருமல், தலைவலி, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
 - *இரும்புச்சத்து, புரதம், சுண்ணாம்புச்சத்து மற்றும் பல வைட்டமின்களும், ஊட்டச்சத்துக்களும் உள்ளதால் இதனை இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டால் உடல், எலும்பு, நரம்புகள் பலம் அடையும்.
 - *1 கப் (164 கிராம்) கொண்டைக்கடலையில் 12.5 கிராம் நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் செரிமான திறனை அதிகரிக்கிறது. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
 - *இதயத்திற்கு பலத்தைக் கொடுக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதால் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
 - *கோலைன் (choline) சத்து மூளை மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவுகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறது.
 - *இரும்புச்சத்து குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படுகிறது. ஒரு கப் கொண்டைக்கடலையில் அதிக அளவு செலினியம் இருப்பதால் கல்லீரல் நன்றாகச் செயல்பட உதவுகிறது.
 - *கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்து பெருங்குடலில் ஏற்படும் புற்று நோயின் ஆபத்தை குறைக்கிறது. மேலும் வைட்டமின் சி ஆன்டி ஆக்ஸிடன்டாக செயல்படுகிறது.
 - *கொண்டைக்கடலையை ஊற வைத்து அரைத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும். முகம் பளபளப்பாகும்.
 - *வாத நோய் உள்ளவர்கள், மூலநோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக்கடலையை தவிர்ப்பது நல்லது.
 
மேலும் ஆரோக்கிய தகவல்களை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்