நடிகை சினேகா கணவருடன் பழனி ஆலயத்தில் சாமி தரிசனம்!
Prabha Praneetha
3 years ago

பழனி ஆலயத்திற்கு நடிகை சினேகா தனது கணவரும், நடிகருமான பிரசன்னா மற்றும் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
இதன்போது, ஆலயத்தில் கூட்டம் அதிகமாக இருந்தமையினால், ஆலய வளாகத்திலேயே சற்று நேரம் அவர்கள் அமர்ந்திருந்துள்ளனர்.
அதன்பின்னர் வரிசையில் நின்று நடிகை சினேகா மற்றும் அவரது குடும்பத்தினர் மூலவர் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்து, போகர் சன்னதியிலும் சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபட்டுள்ளனர்.
இதேவேளை தரிசனம் முடிந்து வெளியே வந்த சினேகாவுடன் ஏராளமான ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ் சினிமா தொடர்பான தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.



