மேலும் ஆங் சான் சூ ச்சிக்கு 4 ஆண்டுச் சிறைத்தண்டனை

மியன்மாரின் முன்னாள் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சிக்கு (Aung San Suu Kyi) மேலும் 4 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மியன்மார் நீதிமன்றம் அந்தத் தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தியதுமுதல், 76 வயதுத் திருவாட்டி சூச்சி தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
வாக்கி-டாக்கி (walkie-talkie) சாதனங்களைச் சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது, அதை வைத்திருந்தது, கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகளின் தொடர்பில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது.
ஏற்கெனவே சென்றமாதம் அவருக்கு 4 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ராணுவ அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிவிட்டது, தேர்தல் பிரசாரத்தின்போது COVID-19 விதிமுறைகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகளின்பேரில் அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
சுமார் 12 வழக்குகளில் திருவாட்டி சூச்சி விசாரிக்கப்பட்டுவருகிறார்.
தம் மீதான எல்லாக் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.
மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்



