மோல்னுபிரவிர் மாத்திரை.. ஆய்வில் வெளியான முக்கிய தகவல்.!!!

Keerthi
3 years ago
மோல்னுபிரவிர் மாத்திரை.. ஆய்வில் வெளியான முக்கிய தகவல்.!!!

மோல்னுபிரவிர் மாத்திரையை கொரோனா தொற்று லேசாக இருப்பவர்களுக்கு இதனை வழங்கும் போது 3% மட்டுமே நோய் தாக்கத்தில் இருந்து காக்கும் எனவும், கருவில் இருக்கும் குழந்தையைக் கூட இந்த மாத்திரை பாதிக்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத்திரை பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால் கொரோனா சிகிச்சைக்கு அதனை பயன்படுத்த முடியாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளதாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.

மோல்னுபிரவிர் என்ற மாத்திரையை கொரோனா நோயாளிகளுக்கு அவசர கால தேவைக்கு பயன்படுத்த அண்மையில் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து கடந்த வாரம் இந்த மாத்திரை சந்தைக்கு வந்தது, வெறும் 1433 நோயாளிகளிடம் மட்டுமே இது பரிசோதிக்கப்பட்ட இந்நிலையில் இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மோல்னுபிரவிரை சிகிச்சை பட்டியலில் வைத்துக் கொள்ள முடியாது என கொரோனா task force முடிவு செய்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்தார்.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!