பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாக வாக்கு கொடுத்த சீனா

இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த மோதல் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மூலம் இன்று மாலையுடன் முடிவுக்கு வந்தது.
இருப்பினும் ஜம்மு காஷ்மீர் மீது ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாகவும், இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருவதாகவும் வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பாகிஸ்தானுக்கு சீனா தொடர்ந்து உதவி வழங்கும் என்றும், அந்நாட்டிற்கு ஆதரவாக நிற்கும் என்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உறுதியளித்தார். வாங் யி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாந்த் தாரை அழைத்துப் பேசினார்.
பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் சீனா துணை நிற்கும் என்று வாங் யி தெளிவுபடுத்தினார். இந்த சந்தர்ப்பத்தில், தற்போதைய நிலைமை குறித்து வாங் யீ -இடம் இஷான் டார் விளக்கினார் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடினமான சூழ்நிலைகளிலும் பாகிஸ்தான் நிதானத்தைக் கடைப்பிடித்து வருவதாகவும், அதன் பொறுப்பான அணுகுமுறையை நாங்கள் பாராட்டுகிறோம் என்றும் வாங் யி கூறியதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எப்போதும் ஒரு மூலோபாய கூட்டாளியாகவும், பிரிக்க முடியாத நண்பராகவும் இருந்து வரும் சீனா, பாகிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக ஆதரவளிக்கும்" என்று கூறியுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




