போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு வான்வெளியை மீண்டும் திறந்த பாகிஸ்தான்
#India
#Flight
#Pakistan
#ceasefire
Prasu
1 month ago

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.
இதனால் பாகிஸ்தான் அரசு ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் வான்வெளியை மூடியது. பாகிஸ்தான் நாட்டு விமானங்கள் உள்பட அனைத்து விமானங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு வான்வெளியை பாகிஸ்தான் மீண்டும் திறந்தது. இதனையடுத்து பாகிஸ்தானில் விமான போக்குவரத்து தொடங்கவுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



