உலகை மிரட்டும் தடுப்பூசிக்கும் அடங்காத புதிய ‘மார்பர்க்’ வைரஸ் கண்டுபிடிப்பு!

#world_news
Nila
3 years ago
உலகை மிரட்டும் தடுப்பூசிக்கும் அடங்காத புதிய ‘மார்பர்க்’ வைரஸ் கண்டுபிடிப்பு!

உலகில் இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத புதிய வைரஸ் “மார்பர்க் ” (Marburg ) தென் மேற்கு ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்படுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா, டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸ்கள் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனாவை விட வித்தியாசமான புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

8 நாட்களாக சாதாரண நோய் நிலைமை அவதானிக்கப்பட்ட நபர் ஒருவருக்கே, தற்போது இந்த “மார்பர்க்” வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உலக சுகாதார நிறுவனதுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தொற்று உள்ளவருடன் தொடர்புகளை பேணிய 150 பேர் தனிமைப்படுத்தப்படுள்ளனர்.

மார்பர்க் வைரஸ், கொரோனா வைரஸிலிருந்து வேறுபட்டது.ஆனால் தொற்றாளர்களை பராமரிக்கும் முறை ஒரே மாதிரியானது.

அத்துடன் குறித்த வைரசுக்கு,தடுப்பூசி எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!