சுவீடன் மன்னர், ராணிக்கு கொரோனா
Keerthi
3 years ago

சுவீடன் நாட்டு மன்னர் கார்ல் குஸ்டாப் (வயது 75). ராணி சில்வியா (78). இவர்கள் இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து அரண்மனை சார்பில் கூறும்போது, மன்னர், ராணிக்கு லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளன. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இருவரும் நன்றாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவீடன் மன்னர், ராணி, இருவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்



