சிஐடியில் ஆஜராகாத லிட்ரோ நிறுவன அதிகாரிகள்

#Colombo #Litro Gas
Prathees
3 years ago
சிஐடியில் ஆஜராகாத லிட்ரோ நிறுவன அதிகாரிகள்

லிட்ரோ நிறுவனத்தின் எந்த அதிகாரியும் இதுவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகவில்லை என இன்று (05) தெரியவந்துள்ளது.

எரிவாயு தொடர்பான வெடிப்புகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பான அறிக்கைகளைப் பெறுவதற்கு சிஐடியில் ஆஜராகுமாறு லிட்ரோ அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.

முறைப்பாடுகளின் முன்னேற்றம் குறித்து விசாரிக்க சமகி ஜன பலவேக எம்.பி.க்கள் குழு  சி.ஐ.டி.க்கு சென்று அதன் அதிகாரிகளை சந்தித்தபோது இது தெரியவந்துள்ளது.

எரிவாயு சிலிண்டரைப் பெற மக்கள்  நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்கின்ற சம்பவம்  இன்றும் நாட்டின் பல பகுதிகளில் காணப்பட்டது.

அம்பலாங்கொடை பகுதியில் இன்று அதிகாலை 2 மணியிலிருந்தே எரிவாயுவிற்காக மக்கள் வரிசையில் நின்றனர்.

இன்று காலை 9 மணியளவில் எரிவாயு ஏற்றிச் சென்ற லொறி ஒன்று அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு எரிவாயு விநியோகம் செய்யப்பட்டது.

நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

பின்னர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!