சுவிட்சர்லாந்தில் வெளியான அறிவிப்பு..!!

Keerthi
3 years ago
சுவிட்சர்லாந்தில் வெளியான அறிவிப்பு..!!

சுவிட்சர்லாந்தின் ஒரு மாநிலத்தில் நாளையிலிருந்து தனிமைப்படுத்துதல் காலம் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் பேசல் மகாணத்தில் கொரோனா தனிமைப்படுத்துதல் முறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதன்படி, தனிமைப்படுத்துதல் காலம் ஒருவாரத்திற்கு குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், கொரோனா கண்டறியப்படுவதும் எளிமையாக்கப்பட்டிருப்பதாக மாகாணத்தின் சுகாதாரத்துறை கூறியிருக்கிறது.

ஓமிக்ரோன் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனோ கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த தாக்கத்தைக் குறைப்பதற்காக மாகாணத்தின் சுகாதாரத்துறை, விதிகளில் மாற்றம் கொண்டு வந்திருக்கிறது.

அதன்படி, கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டும் தான் மாநில சுகாதாரத் துறைக்கு புகார் தெரிவிக்க வேண்டும். அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். தனிமைப்படுத்தப்படும் நாட்களில் அல்லது தனிமைப்படுத்தப்படும் காலம் முடிவடைந்த பின்பு பிசிஆர் அல்லது ரேபிட் பரிசோதனை செய்ய வேண்டும்.

ஆனால், இதற்கு முன் 10 நாட்களாக இருந்த தனிமைப்படுத்துதல் காலம் தற்போது ஒரு வாரமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய விதி, நாளை முதல் நடைமுறைக்கு வரும். மேலும் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு நெருங்கிய தொடர்பில் இல்லாத நபர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!