15 இலங்கையர்கள் மீது இந்திய புலனாய்வு பிரிவு அதிரடி நடவடிக்கை
#India
Mayoorikka
3 years ago

இந்தியாவிற்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 15 இலங்கையர்கள் மீது தேசிய புலனாய்வுப் பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு புத்துயிரூட்ட முயற்சித்ததாகவும், இலங்கைக்கு எதிராக போரில் ஈடுபட்டதாகவும் கூறியே இவர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் இந்த ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி அரபிக்கடலில் மீன்பிடிக் கப்பலில் ஒன்றிலிருந்து கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்த கைது சம்பவத்தின்போது அவர்களிடமிருந்து பெருந்திரளான போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் என்பனவும் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



