பல் ஈறு உறுதியில்லையா? இதை செய்யுங்கள்....
                                                        #Health
                                                    
                                            
                                    Mugunthan Mugunthan
                                    
                            
                                        3 years ago
                                    
                                - பல் உறுதியாக சீஸ் சாப்பிடுவது நல்லது. சீஸ் சாப்பிடுவதால் உமிழ் நீர் சுரந்து பல்லை மேலும் உறுதிப்படுத்துகிறது.
 - Sugar Free Gum சாப்பிடுவதால் நமது வாயில் உமிழ் நீர் சுரக்கும். அப்படி உமிழ் நீர் சுரப்பதால் ஈறுகள் மற்றும் பல்லை வலுவாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
 - தண்ணீர் குடிப்பது நல்லது. தண்ணீர் குடிப்பதால் ஈறுகள் வறட்சி ஆகாமல் பார்த்து கொள்கிறது. மேலும் தண்ணீர் சத்தை உடலுக்கு கொடுக்கிறது. ஈறுகள் உறுதியாக இருப்பதற்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது.
 
ஈறுகள் உறுதியாக பால்:
- பாலில் வைட்டமின் டி மற்றும் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால் உணவில் பாலை சேர்த்து கொள்வது நல்லது. பாலை தினசரி குடிப்பதன் மூலம் உடலுக்கு ஊட்டச்சத்தை தருவது மட்டுமின்றி ஈறுகளை சரி செய்யவும் உதவுகிறது.
 
ஆப்பிள்:
- பல் ஈறு வலி வீட்டு வைத்தியம்:
 - தேவையான பொருட்கள்:
 - பெருஞ்சிரகம் – 1 டேபிள் ஸ்பூன்
 - கிராம்பு பொடி – 1 டேபிள் ஸ்பூன்
 - கடுக்காய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
 - அதிமதுரம் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
 - மாதுளை பழத்தின் தோல் – 1 டேபிள் ஸ்பூன் (மாதுளை தோல் பொடி)
 
செய்முறை:
- மாதுளை பழத்தின் தோலை நன்றாக காய வைத்து பின் அதனை பொடியாக்கி கொள்ளவும்.
 - பெருஞ்சிரகம் (சோம்பு) 1 டேபிள் ஸ்பூன் எடுத்து அதனை மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
 - பின் 1 டேபிள் ஸ்பூன் கிராம்பு பொடி, 1 டேபிள் ஸ்பூன் கடுக்காய் பொடி, அதிமதுரம் பொடி 1 டேபிள் ஸ்பூன், பின் நாம் அரைத்து வைத்த மாதுளை பழத்தின் தோல் பொடியை 1 டேபிள் ஸ்பூன் மற்றும் சோம்பு பொடி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கொள்ளவும்.
 - பின் இந்த பொடியை வைத்து காலை பல் துலக்கி கொப்பளிக்க வேண்டும். இந்த பற்பொடியை பயன்படுத்துவதன் மூலம் ஈறுகள் மற்றும் பல் உறுதி பெரும். பல் துலக்கும் போது ஆள்காட்டி விரலை பயன்படுத்துவது நல்லது. ஆள்காட்டி விரலை பயன்படுத்துவது ஆசனத்தில் ஒன்றாக கருதப்படுகிறது. மலச்சிக்கலை குணப்படுத்துவதற்கும் உதவுகிறது.
 - இது போன்ற பற்பொடியை பயன்படுத்துவதால் பல் உறுதியாக இருப்பது மட்டுமின்றி வாயில் உள்ள கிருமிகள் அழியும்.