அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது!

Mayoorikka
1 year ago
அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சகல அம்பியூலன்ஸ் வண்டிகளிடம் கட்டணம் அறவிடப்படமாட்டாது என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் சகல அம்பியூலன்ஸ் வண்டிகளிடம் (அரச மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுடன் தொடர்புள்ள) அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் அறவிடாதிருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இதற்கு முன்னர் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அம்பியூலன்ஸ் வண்டிகளிடம் கட்டணம் அறவிடப்பட்டது.

கொவிட் தொாற்று காரணமாக நாட்டு நிலைமையை கருத்திற் கொண்டு அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் சகல அம்பியூலன்ஸ்களிடம் கட்டணம் அறிவிடுவதை மே மாதம் 20 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மேலும் தெரிவித்தார்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு