ஒமிக்ரோனிடமிருந்து பாதுகாப்பை பெற, பூஸ்டர் அவசியமா? ஆய்வில் வெளியான தகவல்!
#world_news
#Covid Vaccine
Nila
4 years ago
ஒமிக்ரோன் வைரஸ் பிறழ்விலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு கொவிட் தடுப்பூசியின் 2 மருந்தளவுகள் (DOSE) போதுமானதாக இல்லை என பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இதன்படி, தடுப்பூசியின் மூன்றாவது மருந்தளவை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என ஆய்வை முன்னெடுத்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பூஸ்டர தடுப்பூசியை செலுத்திக்கொள்வதன் ஊடாக, 75 சதவீத மேலதிக பாதுகாப்பு கிடைக்கும் என கூறப்படுகின்றது.
அஸ்ட்ரா சேனிகா மற்றும் பைசர் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது