ஈராக்கில் மோட்டார் சைக்கிள் வெடிப்பு - 4 பேர் உயிரிழப்பு- தற்கொலைப்படை தாக்குதலா?
Prasu
4 years ago
ஈராக் நாட்டின் தெற்கு பகுதியின் மத்தியில் அமைந்துள்ள நகரம் போஸ்ரா. இந்த நகர வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென வெடித்து சிதறியது. அதன் அருகில் இருந்த 2 கார்களும் தீப்பிடித்து எரிந்தன. இதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் நான்குபேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போஸ்ரா நகர ஆளுநர் ஆசாத் அல்-இதானி, மோட்டார் சைக்கிள் வெடித்தபோது வானில் கரும்புகை பரவியதாக கூறினார். அந்த மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததா? அல்லது தற்கொலைப்படையை சேர்ந்தவனின் வாகனமா? என்பது உடனடியாக தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்தை தடயவியல் குழு ஆய்வு செய்துள்ளதாகவும் விசாரணையின் முடிவில், குண்டு வெடிப்பின் உண்மையான காரணம் குறித்து அறிக்கை வெளியாகும் என்று ஈராக் பாதுகாப்பு ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.