2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, தங்க நாக்குடனான மம்மி!

#world_news
2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, தங்க நாக்குடனான மம்மி!

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து 220 கிலோமீட்டர் தெற்கே இருக்கும் எல்-பஹ்னாசா பகுதியில் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியில் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மம்மிக்கு தங்க நாக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

14 பேர் கொண்ட அகழ்வாராய்ச்சிக் குழுவில் ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருந்தனர்.

வட அமெரிக்காவின் கரீபியன் தீவுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசில் உள்ள  ‘சாண்டோ டொமிங்கோ பல்கலைக்கழக’ ஆராய்ச்சிக் குழுவின் தலைமையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மியில் தங்கத்தால் ஆன நாக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 2 கல்லறைகளின் உள்ளே புதைக்கப்பட்ட சடலங்களின் நாக்குகளை தங்க தகடுகளால் மாற்றி, பழங்கால எகிப்தியர்கள் நல்லடக்கம் செய்து உள்ளனர். இதன்மூலம், எகிப்தியர்களின் பாதாள உலக கடவுளாக கருதப்படும் ஓப்சிரிஸ் உடன் இறந்தவர்களின் ஆவி பேசுவதற்காக பழங்கால எகிப்தியர்கள் இந்த நடைமுறையை கையாண்டுள்ளனர்.

இவை இரண்டு கல்லறைகளும் கி.மு. 525க்கு முந்தைய சைட் வம்சத்தை சார்ந்தவை ஆகும். இறந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. மம்மியின் வாயிலிருந்து வெளியே தள்ளிய நிலையில் அந்த தங்கத்திலான நாக்கு அமைந்துள்ளது.

ஒரு கல்லறையினுள்,  இறந்த அந்த ஆணின் உடல் மிக நன்றாக பாதுகாக்கப் பட்டு கல்லறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. ஆணின் கல்லறைப்பெட்டியில் இருந்து 402 மண்பாண்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

அத்துடன் சிறிய தாயத்துக்களில் பச்சை மணிகள், நகைகள் மற்றும் கல்லறை பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டு
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!