கழிவுப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம்..!
Keerthi
3 years ago

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இந்த மாதம் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் இப்போதே உலகின் பல நாடுகளில் பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் அணிவகுப்புகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான ஆரவாரம் தொடங்கிவிட்டது.
இந்த நிலையில், லாட்வியா நாட்டின் தலைநகர் ரிகாவில் கழிவுப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் கவனம் ஈர்த்துள்ளது.
கழிவுப்பொருட்களின் அளவைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இந்த கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தலைநகர் ரிகாவில் பொது மக்களின் பார்வைக்கு இந்த கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது.



