இனப்பெருக்கத்திற்காக இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான செந்நிற நண்டுகள்
Keerthi
4 years ago
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து கடற்கரைக்கு லட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் இடம்பெயர்ந்தன. ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்கத்திற்காக இவ்வாறு நண்டுகள் இடப்பெயர்ச்சி செய்வது வழக்கம். இந்தாண்டும் லட்சக்கணக்கான செந்நிற நண்டுகள் கூட்டம் கூட்டமாக சாலைகளை கடந்து கடற்கரையை நோக்கி பயணித்தன.
சில இடங்களில் லட்சக்கணக்கான நண்டுகள் சாலையில் இடம்பெயர்ந்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓரே நேரத்தில் லட்சக்கணக்கான செந்திற நண்டுகளின் இந்தப் பயணம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.