ரஷ்ய நிறுவனத்துக்கு அமெரிக்கா எச்சரிக்கை
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
மாலியில் செயல்பட்டு வரும் ரஷ்யாவைச் சேர்ந்த ராணுவ உபகரண தயாரிப்பு நிறுவனத்திற்கு, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டு போர்மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் கடந்த ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே, ராணுவம் - பிரிவினைவாதிகள் இடையே உள்நாட்டு போர் நிலவி வருகிறது.இதில், ராணுவ உபகரணங்களை தயாரிக்கும் ரஷ்ய நிறுவனமான 'வாக்னர்' குழுமம், மாலி ராணுவத்திற்கு அவற்றை வினியோகித்து வருகிறது.
இது, ரஷ்ய அதிபர் புடினுக்கு நெருக்கமானவரின் குழுமம் என்பதாலும், இதன் தலையீட்டால் நாட்டில் நிலைமை மோசமாகி வருவதாலும், இதற்கு மேற்கத்திய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.