சீரற்ற காலநிலையால் 4 பேர் மரணம்! இருவரைக் காணவில்லை
#weather
#Death
Prathees
4 years ago
நாட்டின் 10 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் நேற்று மாலை வரை 1504 குடும்பங்களைச் சேர்ந்த 6054 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக மூன்று வீடுகள் முழுமையாகவும் 432 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களைச் சேர்ந்த 125 பேர் நான்கு தங்குமிடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.