மேலும் அடுத்த வருடத்தில் அரை மில்லியன் கொவிட் உயிரிழப்புகள் பதிவாகும் -WHO எச்சரிக்கை
Keerthi
4 years ago
ஐரோப்பாவின் கொவிட் 19 உயிரிழப்புகள் அதிகரித்துச் செல்கின்றமை பாரியளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் அடுத்த வருடத்தில் அரை மில்லியன் அளவான கொவிட் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
ஐரோப்பாவில் உள்ள 53 நாடுகளிலும் மிக மோசமான நிலைமை நிலவுவதாகவும் மத்திய ஆசிய நாடுகளும் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஐரோப்பாவின் பணிப்பாளர் ஹன்ஸ் லுக் குறிப்பிட்டுள்ளார்.