ரூ.20 கோடி மதிப்புள்ள வைரக் கல்லை தூக்கி எறிந்த பெண் - காரணம் என்ன?
பணம் தான் நம்மை ஆட்டி படைக்கும் மாபெரும் சக்தியாக இன்று மாறி உள்ளது. கீழே பத்து ரூபாய் நோட்டு விழுந்து கிடந்தால் அதை நம் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் பழக்கம் தான் நம்மில் பலருக்கும் உண்டு.
ஆனால், இங்கு பெண்மணி தனக்கு கிடைத்த 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை குப்பை தொட்டியில் வீசியுள்ள இந்த சம்பவம் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஏன் அவர் இவ்வளவு விலை மதிப்புள்ள வைரத்தை தூக்கி எறிந்தார்? இதற்கான உண்மை காரணம் என்ன? ஆகியவற்றை இனி அறிந்து கொள்ளலாம்.
லண்டனை சேர்ந்த பெண் ஒருவர் அங்கு நடைபெற்ற ஏலம் ஒன்றில் பளபளப்பான கல் ஒன்றை ஏலம் எடுத்துள்ளார். தனது வீடுகளில் உள்ள பழமையான பொருட்களை இது போன்று ஏலம் விடுவது மேற்கத்திய நாடுகளில் மிக பிரபலம். இன்று வரையிலும் இது போன்ற பல ஏலங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சிலருக்கு இவற்றில் வாங்கும் பொருட்களின் மதிப்பு பல வருடங்களுக்கு பின் அதிக விலை போகும் என்கிற நம்பிக்கையும் உண்டு.
இப்படிப்பட்ட ஒரு எதிர்பாராத விஷயம் தான் இந்த பெண்மணிக்கும் நடந்துள்ளது. இவர் சாதாரண கல் என்று அன்று வாங்கிய அந்த கல்லின் மதிப்பு இன்று சுமார் 20 கோடியாம். இதை சிறிதும் அறியாமல் சாதாரண சிந்தடிக் கல் என்று இப்பெண் அதை நினைத்துக்கொண்டு குப்பை தொட்டியில் தூக்கி எறிந்துள்ளார்.
இதை அறிந்த அவரின் நெருங்கிய பக்கத்துக்கு வீட்டுக்கார உறவினர் ஒருவர் இந்த கல் உண்மையில் எதாவது விலைமதிப்புள்ள கல்லாக இருக்கக் கூடும். எனவே நாம் ஒரு முறை இதை பரிசோதித்து விடலாம் என அறிவுரை கூறியுள்ளார். அப்பெண்மணியும் சரி ஒருமுறை சோதித்து பார்ப்பதால் எதுவும் ஆகிவிட போவதில்லை என்று எண்ணி இதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
இதை ஏலம் எடுக்கும் நிபுணர்களிடம் சென்று பரிசோதிக்கும்படி கொடுத்துள்ளனர்அங்கு பரிசோதிக்கையில் அதன் மதிப்பு 2 மில்லியன் யூரோஸ் என தெரிய வந்தது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 20 கோடி ஆகும். அது மட்டுமின்றி இது 34 கேரட் தலைசிறந்த வைரமாகும். இதன் அளவு 1 யூரோ காயினை விட பெரிதாக உள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அப்பெண்மணி கேட்டதும் ஆனந்தத்தில் திக்குமுக்காடி விட்டார்.
இனி எந்தப் பொருளை தூக்கி எரியும் முன் அதன் உண்மையான மதிப்பை ஒரு முறை பரிசோதித்து கொள்வது நல்லது என்பதை இவரின் இந்த உண்மை சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.