காணாமல் போன 4 வயது சிறுமி 18 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்பு

Prasu
4 years ago
காணாமல் போன 4 வயது சிறுமி 18 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்பு

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கார்னர்வோன் நகருக்கு அருகே உள்ள ஒரு முகாம் தளம் உள்ளது.

இங்கிருந்து கடந்த மாதம் 16-ந் தேதி தனது குடும்பத்தின் கூடாரத்தில் இருந்த கிளியோ சுமித் என்ற 4 வயது சிறுமி திடீரென்று காணாமல் போனார். சிறுமியை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

சிறுமியை பற்றிய தகவல் தருவோருக்கு 7.5 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு வீட்டில் சிறுமி பூட்டி வைக்கப்பட்டிருப்பதாக போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நேற்று காலை போலீசார் அங்கு சென்றனர். பூட்டிய வீட்டை போலீசார் உடைத்தபோது அங்கு ஒரு அறையில் அந்த சிறுமி இருப்பதை கண்டுபிடித்தனர்.

அதன்பின் சிறுமி மீட்கப்பட்டு அவளது குடும்பத்துடன் பத்திரமாக சேர்த்து வைக்கப்பட்டார். சிறுமி கடத்தப்பட்டது தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், சிறுமி கிளியோ மீட்கப்பட்ட செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!