மலையகத்தில் இன்று ஆசிரியர்கள் போராட்டம்
#Sri Lanka Teachers
#Protest
#NuwaraEliya
Prasu
4 years ago
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு ஒரே தடவையில் தீர்வு வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினமும் (02) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா, வலப்பனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்தே கொட்டும் மழைக்கு மத்தியில் இராகலை நகரில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இராகலை அஞ்சல் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம் ஆரம்பமானதுடன், பதாதைகளை தாங்கியவாறும், கோஷங்களை எழுப்பிய வண்ணமும் இராகலை முருகன் கோவில் வரை போராட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்றனர்.
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு 24 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. அதற்கு உடனடி தீர்வு வேண்டும். இனியும் காலம் இழுத்தடிக்கப்படக்கூடாது என அதிபர், ஆசிரியர்கள் வலியுறுத்திக்கூறினர்.