உலகமெங்கும் உள்ள இந்து மக்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய போப் ஆண்டவர்

உலகமெங்கும் உள்ள இந்து மக்கள் வருகின்ற நான்காம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ளனர். அதனை முன்னிட்டு கிறிஸ்துவர்களின் தலைமை பீடமாக இருக்கும், வாடிகனில் உள்ள போப் ஆண்டவர், இந்து மக்களின் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் போப் ஆண்டவர் தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் அந்த வாழ்த்து செய்தியில் தெரிவித்து இருப்பதாவது, "கொரோனா நோய்த்தொற்று காலத்தில் உலக மக்கள் பல நெருக்கடிகளை சந்தித்து உள்ளனர். இந்த நிச்சயமற்ற நிலையில் கூட இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது, எதிர்காலத்துக்கான நம்பிக்கையை உங்கள் வாழ்க்கைக்கு ஒளிரச் செய்யும்.
உங்கள் வீடுகளை, சமூகங்களை ஒளிரச் செய்யும். இந்த கொரோனா பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலைகள் காரணமாக, மக்கள் தங்களது உயிர்களையும், வாழ்வாதாரத்தையும் இழந்து உள்ளனர்.
பலரும் தங்கள் வேலைகளை இழந்து விரக்தியின் உச்சியில் உள்ளனர். இது போன்ற தருணங்களில் கிறிஸ்தவர்களும், இந்து மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை ஏற்ற முடியும். மாதங்களுக்கு இடையிலான ஒற்றுமையின் மூலம் மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவதால், சமூகத்தில் மத மரபுகளின் பயன் மற்றும் வளத்தை உறுதியாகின்றது" என்று போப் ஆண்டவர் வெளியிட்டுள்ள அந்த வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



