வீடொன்றில் இருந்து 13 பேர் கைது
#Arrest
Prasu
3 years ago

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 5வாள்கள், 2 மோட்டார் சைக்கிள் செயின், 6 சரை கஞ்சா மற்றும் ஒரு கிராம் 650 மில்லிக் கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கைது நடவடிக்கை இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.
பழைய வீடொன்றில் வன்முறைக் கும்பல் ஒன்று வன்முறைக்கு தயாராகி வருவதாக பொலிஸாருக்குக் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர்கள் 13 பேரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



