எதற்காக நெடுஞ்சாலையில் ஆடையின்றி இராணுவச் சிப்பாய் சென்றார்?
#Shavendra Silva
#Arrest
Prathees
3 years ago

இராணுவத் தளபதியின் பெயரைக் கூறிக் கொண்டு மதுபோதையில் நிர்வாணமாக நெடுஞ்சாலையில் சென்ற ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
119 இலக்கத்திற்கு மற்றும் புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
'நாங்கள் சவேந்திர சில்வாவின் சீடர்கள்' என கூச்சலிட்டு அவர் ஆபாசமான முறையில் நடந்து கொண்டதாக பிரதேசவாசிகள் முறைப்பாடு செய்திருந்தனர்.
இவர் பல நாட்களாக இவ்வாறு நடந்து கொள்வதாகவும்இ ஆடையின்றி வீதியில் நடந்து செல்வதாகவும் அருகில் உள்ள முன்பள்ளியின் பாதுகாவலர் ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



