அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வெளியானது விசேட வர்த்தமானி
#Gotabaya Rajapaksa
Prathees
3 years ago

12 பிரதேசங்களில் இயங்கும் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல், வங்கி முதலான சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது



